
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 1/2 கிலோ
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெல்லம் - சுண்டைக்காய் அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
செய்முறை:
வெண்டைக்காயைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு சுத்தமான துணியால் துடைத்து மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
புளியைக் கெட்டியாகக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் கலந்து கொள்ளவும்.
இருப்புச்சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், தாளித்து நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் புளிக்கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைக்கவும்.
0 comments:
Post a Comment