
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 500 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பெருகாயத்தூள் - 1/4 தேக்கரண்டி
வெல்லம் - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை,
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
செய்முறை:
கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி தண்ணீரில் போடவும். புளியைக் கெட்டியாகக் கரைக்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுக் கிளறி, கத்தரிக்காய், புளி, மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் எல்லாம் சேர்த்துப் போட்டு மூடி வைக்கவும்.
அடிக்கடி கிளறி விடவும். கத்தரிக்காய் நன்றாக குழையாமல் வெந்து வதங்கியதும் தேங்காயைத் துருவிக் கிளறி இறக்கி வைக்கவும்.
0 comments:
Post a Comment