தேவையான பொருட்கள்
லவங்கம் -- 1
தக்காளி -- 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் -- 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் -- 1 (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு நீர்-- 2 கப் (பருப்பு வேகவைத்த நீர் மட்டும் போதும் பருப்பு வேண்டாம்)
பூண்டு -- 2 பல் (நசுக்கியது)
பால் -- 1 கரண்டி
உப்பு -- தே.அ
செய்முறை
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு லவங்கம் போட்டு பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் துவரம் பருப்பு நீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்கும் சமயத்தில் பூண்டு போட்டபின் காய்ச்சி நன்கு ஆறிய பாலை ஊற்றி இறக்கவும்.
செட்டி நாடு சூப் தயார்.
0 comments:
Post a Comment