Chettinadu Samayal: Date fruit halwa-Chicken, Samayal, Cooking non-veg, Tiffin, Veg, Sweets, Restaurant, Spicy, Ice cream, Cake, Egg, Pickle
rss
twitter Namma Veetu Chettinad samayal Kurippu

    Date fruit halwa


    தேவையான பொருட்கள்:


    பேரீச்சம்பழம்(விதைநீக்கிபொடியாகநறுக்கிய) - 1கப்
    சீனி(சக்கரை) - 1கப்
    நெய் - 1கப்
    பால் -அரைகப்
    பாதாம்பருப்பு - தேவையானளவு
    முந்திரிப்பருப்பு - தேவையானளவு
    குங்குமப்பூ - தேவையானளவு
    வெந்நீர்(சுடுதண்ணீர்) - (1 - 1+1/2) கப்


    செய்முறை:


    முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழத்தை போட்டு அதனுடன் வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு ஊற வைக்கவும் (பேரீச்சம்பழத்தின் அளவை விட சிறிதளவு அதிகமாக வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு (4 - 6மணித்தியாலம்) நன்றாக ஊறவிடவும் அதாவது பேரீச்சம்பழம் முழுவதும் வெந்நீரின் உள்ளே தாழ்ந்து இருக்கவேண்டும்).
    பேரீச்சம்பழம் ஊறிய பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) ஊறிய பேரீச்சம்பழம், பால் ஆகியவற்றை போட்டு நன்றாக அரைக்கவும்.
    ஒரு தட்டு முழுவதிற்கும் சிறிதளவு பட்டரை அல்லது நெய்யை பூசி வைக்கவும்.
    பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கி அதில் சீனி(சக்கரை),தண்ணீர் ஆகியவற்றை போட்டு பாகு காச்சவும்.
    சீனி(சக்கரை) இளம்பாகு பதத்தை அடைந்ததும் அதனுள் அரைத்து வைத்திருக்கும் பேரீச்சம்பழ விழுது ,நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக மரஅகப்பையால் அல்லது கரண்டியால் கிளரவும்.
    அதன் பின்பு இதனுடன் முந்திரி, குங்குமப்பூ, பாதாம் பருப்பு ஆகியவற்றைபோட்டு நன்றாக மரஅகப்பையால் அல்லது கரண்டியால் கிளரவும்.
    இவை யாவும் ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்தை அடைந்ததும் பேரீச்சம்பழ அல்வா தயாராகி விட்டது.
    பின்பு தயாரான பேரீச்சம்பழ அல்வா உள்ள தாட்சியை (வாணலியை)அடுப்பிலிருந்து இறக்கவும்.
    அடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில்(வாணலியில்) உள்ள பேரீச்சம்பழ அல்வாவை பட்டர் அல்லது நெய் பூசிய தட்டில் போடவும்.
    தட்டில்போட்ட பின்பு பேரீச்சம்பழ அல்வாவை நன்றாக பரப்பி விடவும்.
    பின்பு அதன் மேல் கத்தியால் விரும்பிய வடிவங்களில் அத்துடன் வெட்டக்கூடிய ஆழத்திற்கு கோடுகளை போடவும்.
    இவை யாவற்றையும் செய்த பின்பு பேரீச்சம்பழ அல்வாவை நன்றாக ஆற விடவும்.
    இந்த அல்வா நன்றாக ஆறியதும் கோடு போட்ட இடங்களில் கத்தியால் வெட்டி எடுக்கவும்.
    தேவையான அளவு வெட்டி எடுத்த பேரீச்சம்பழ அல்வா துண்டுகளை ஒருதட்டில் விரும்பியவடிவத்தில் வைத்து அடுக்கவும்.
    அதன் பின்பு தட்டி உள்ள பேரீச்சம்பழ அல்வாவை பறிமாறவும்

    0 comments:

    Post a Comment