Chettinadu Samayal: சுறா புட்டு-Chicken, Samayal, Cooking non-veg, Tiffin, Veg, Sweets, Restaurant, Spicy, Ice cream, Cake, Egg, Pickle
rss
twitter Namma Veetu Chettinad samayal Kurippu

    சுறா புட்டு

    தேவையான பொருட்கள்:

    சுறா மீன் – அரை கிலோ
    வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
    பூண்டு – 10 – 15 (பொடியாக நறுக்கவும்)
    பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்)
    இஞ்சி – 1 துண்டு (பொடியாக நறுக்கவும்)
    கறிவேப்பிலை – 1 கொத்து (பொடியாக நறுக்கவும்)
    கொத்தமல்லி – 1 கையளவு (பொடியாக நறுக்கவும்)
    மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்
    எண்ணெய் – தேவையான அளவு
    மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
    சோம்பு – அரை டீஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    சுறா மீனை மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து முள், தோல், எடுத்து விட்டு உதிரியாக்கவும்.அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும்.
    கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும்.
    பிசறிய சுறா மீனை போட்டு கிளறி கிளறி பச்சை வாசனை போன பிறகு இறக்கி பரிமாறவும்.

    0 comments:

    Post a Comment