தேவையான பொருட்கள்:
முட்டை – 6
வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – தேவையானது
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்
நாட்டுத் தக்காளி – 4
மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முட்டையை அடித்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தில் கால் பகுதி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து குழிப்பணியாரச் சட்டியில் விட்டு எடுக்கவும்.
அல்லது சின்ன கிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டைக் கலவையை ஊற்றி ஆவியில் வேக வைத்து ஆறிய பிறகு எடுக்கவும்.
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து மீதியிருக்கும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கி உப்பு, மிளகாய்த் தூள் போட்டு சுருள வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கலந்து ஒரு கொதி வந்தவுடன் அவித்த முட்டைக் கலவையினை போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி விடவும்.
0 comments:
Post a Comment