தேவையான பொருட்கள்:
நண்டு – ஒன்றரை கிலோ (ஓடு உடைத்து சுத்தம் செய்தது)
வெங்காயம் – 2 (நீளமாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – 3 (நீளமாக வெட்டவும்)
தேங்காய் – 1 (அரைக்கவும்)
பச்சை மிளகாய் – 15 (அரைக்கவும்)
பூண்டு – 8 பல் (அரைக்கவும்)
இஞ்சி – 1 துண்டு (அரைக்கவும்)
பட்டை – 2 (அரைக்கவும்)
லவங்கம் – 2 (அரைக்கவும்)
ஏலக்காய் – 3 (அரைக்கவும்)
சோம்பு – 1 டீஸ்பூன் (அரைக்கவும்)
கொத்தமல்லி – 1 கைப்பிடி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி, அரைத்த மசாலாவை மஞ்சள் தூள் போட்டு வதக்கி, நண்டை போட்டு நன்றாக வதக்கி, அரைத்த தேங்காயை கரைத்து ஊற்றி உப்பு போட்டு நன்றாக வெந்து சுண்டி வந்த பிறகு இறக்கி வைக்கவும். கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும்.
0 comments:
Post a Comment