தேவையான பொருட்கள்:
1. முட்டை - 4 ( வேக வைத்து இரண்டாக வெட்டியது)
2. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது. சின்ன வெங்காயம் இருந்தால் சிறப்பு. 15 சின்ன வெங்காயம் முன்பே 1 தேக்கரண்டி எண்ணெயில் வதக்கி நசுக்கி வைக்கவும்)
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு
7. கடுகு, சீரகம் - தாளிக்க
எண்ணெயில் வறுத்து அரைக்க:
1. மல்லி - 2 தேக்கரண்டி
2. மிளகாய் வற்றல் - 3
3. பூண்டு - 2 பல்
4. இஞ்சி - 1/2 இன்ச்
5. மிளகு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
8. அரிசி - 1/2 தேக்கரண்டி
9. கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
அரிசி வெள்ளை ஆனதும் இறக்கி, ஆர வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
0 comments:
Post a Comment