தேவையான பொருட்கள்
உருளைகிழங்கு – 1/4 கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
கருவேப்பில்லை – 4 இலை
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி - சிறிதளவு
--------------------------------------------
முதலில் தாளிக்க:
---------------------------------------------
கடுகு – 1/2 தே.கரண்டி
வெந்தயம் – 1/2 தே.கரண்டி
எண்ணெய் – 1 தே.கரண்டி
சோம்பு – 1/2 தே.கரண்டி
---------------------------------------------
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
தனியா தூள் – 1/2 தே.கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – 2 தே.கரண்டி
----------------------------------------------
அரைக்க வேண்டியவை :
-----------------------------------------------
தேங்காய் – 1/4 முடி
பூண்டு – 3 பல்
செய்முறை
முதலில் உருளைகிழங்கினை தோல் நீக்கி பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியினை அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.
புளியினை 3 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
பிறகு புளி தண்ணீருடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கரைக்கவும்.
-----------------------------------------
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெந்தாயம் அதன் பின் சோம்பு போடவும்.
பிறகு வெங்காயம், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி மற்றும் உருளைகிழங்கினை சேர்த்து நன்றாக கிளறி 3 நிமிடம் வதக்கவும்.
பின்னர் இத்துடன் புளி கரைசல் மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து நன்றாக வேகவிடவும்.
இப்பொழுது தேங்காய் மற்றும் பூண்டுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.
உருளைகிழங்கு நன்றாக வெந்தபிறகு இந்த அரைத்த தேங்காயினை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவவும்.
இப்பொழுது சுவையான உருளைகிழங்கு காரகுழம்பு ரெடி.
வழங்கியவர்
0 comments:
Post a Comment