Chettinadu Samayal: சிக்கன் நூடுல்ஸ்-Chicken, Samayal, Cooking non-veg, Tiffin, Veg, Sweets, Restaurant, Spicy, Ice cream, Cake, Egg, Pickle
rss
twitter Namma Veetu Chettinad samayal Kurippu

    சிக்கன் நூடுல்ஸ்

    தேவையான பொருட்கள்:

    நூடுல்ஸ் - 1 பாக்கெட்
    காரட் – 1
    பீன்ஸ் – 10
    முட்டைகோஸ் – 50 கிராம்
    குடமிளகாய் – 1,
    வெங்காயத்தாள் – 5,
    கோழிக்கறி - 200 கிராம் எலும்பில்லாதது)
    பூண்டு - 6 பல்
    வறமிளகாய் – 4
    உப்பு – தேவையான அளவு
    எண்ணெய் – தேவையான அளவு
    கான்பிளவர் – 1 டீஸ்பூன்
    வினிகர் – 1 டீஸ்பூன்

    செய்முறை:

    நூடுல்சை கொதிக்கும் வெந்நீரில் போட்டு, முக்கால் வேக்காடு (அதாவது நசுக்கிப் பார்த்தால் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும்) வெந்த பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகர் ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு வடிகட்டி பச்சைத் தண்ணீரில் நன்றாக அலசி வடிகட்டி எண்ணெய் விட்டு பிசறி வைக்கவும்.
    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு (கோழிக்கறி பீஸில் மிளகாய்த்தூள், உப்பு, கான்ப்ளவர் போட்டு பிசறி) கோழிக்கறி பீஸைப் போட்டு பொரித்து எடுக்கவும். ஆற வைத்து நீளநீளமாகப் பிய்த்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு மசாலாவை சிறு தீயில் வதக்கி மசாலா (மைசூர் பாகு பதம் போல் பூத்து வர வேண்டும்) வரும்போது, காரட், வெங்காயம், பீன்ஸ், முட்டை கோஸ், குடமிளகாய் போட்டு நன்றாக வதக்கி அதில் உப்பு, அஜினாமோட்டோ போட்டு வறுத்த கோழிக்கறியைப் போட்டு நன்றாகக் கிளறி பொடியாக வெட்டிய நூடுல்சை போட்டு நன்றாகக் கிளறி வெங்காயத் தாளைத் தூவி பரிமாறவும்.
    குறிப்பு: காரம் பிடிக்காதவர்கள் கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு வதக்கி, வெங்காயம், காய்கள், உப்பு, அஜினாமோட்டோ (மேலே உள்ள ரெசிப்பிக்கு அஜினாமோட்டோ தேவை இல்லை) கோழிக்கறி சேர்த்து வதக்கி மிளகுத்தூள் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
    உப்பு மட்டும் இறக்கும் போது கொட்டவும். முதலில் போட்டால் தண்ணீர் விட்டு கொண்டு வரும்.

    0 comments:

    Post a Comment